மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தோம்புதோர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 45 வயதுடைய தர்மராசா திருச்செல்வம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸார் வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இறந்த நபரின் மனைவி குவைத் நாட்டில் தொழில்புரிந்து வருவதாகவும், உயிரிழந்தவர் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
-பா.டிலான்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1