25.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இந்தியா

இலங்கைக் காதலியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த காதலன்: தூக்கி வந்து தாலி கட்ட வைத்த போலீசார்!

காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை, காவல்துறை அதிகாரிகள் பிடித்து வந்து காதலியுடன் சேர்த்து வைத்துள்ளனர்.

இலங்கையிலிருந்து அகதியாக வந்த ஒருவர் கடலூர் மாவட்டம் புதுவண்டிப்பாளையம் பகுதியில் திருமணம் முடித்துள்ளார். அந்த தம்பதியின் மகள் கலைச்செல்வி. கல்லூரி பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இவரும், அதேபகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தமிழ்ச்செல்வனும் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி இரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதன் விளைவாக கலைச்செல்வி கர்ப்பம் ஆனார்.

இதனை காதலன் தமிழ்ச்செல்வனிடம் கூறி, உடனடியாக திருமணம் செய்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதற்கு தமிழ்ச்செல்வன் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். ஆறு மாத கர்ப்பத்திற்கு பிறகு, இந்த விஷயம் கலைச்செல்வியின் பெற்றோருக்கு தெரிய வர, தமிழ்ச்செல்வனின் வீட்டிற்கு சென்று மாப்பிள்ளை கேட்டுள்ளனர்.

திருமணத்திற்கு தமிழ்ச்செல்வனின் பெற்றோர் மறுப்பு தெரிவிக்க, கலைச்செல்வி, கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதலன் மீது புகார் அளித்தார்.

இதனையடுத்து தமிழ்ச்செல்வனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முதலில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். பின்னர் கலைச்செல்வி சமர்பித்த ஆதாரங்களை பார்த்தப் பின்பு, அவரது கர்ப்பத்திற்கு காரணம் நான் தான் என ஒப்புக்கொண்டார்.

தனக்கும் இந்த திருமணத்தில் சம்மதம் தான் என்றும், தனது வீட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தமிழ்ச்செல்வன் கூற, இரு வீட்டாரையும் காவல்நிலையம் அழைத்து வந்து சமரசம் பேசினர் காவல்துறையினர்.

பிறகு அதிகாரிகளின் செலவில் இருவருக்கும் புது ஆடைகள் வாங்கிக் கொடுத்து, காவல்நிலைய வளாகத்தில் உள்ள கோயிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து வைத்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
2
+1
3
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

அசைவ உணவை கைவிடும்படி சைக்கோ தனமாக பலவந்தப்படுத்திய காதலன்: 25 வயதான விமானி விபரீத முடிவு!

Pagetamil

Leave a Comment