அண்மையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 18 லீற்றர் (9.6 கி.கி) திரவப் பெற்றோலிய சமையல் எரிவாயு சிலிண்டருக்கு உச்சபட்ச விலை நிர்ணயம் (MRP) செய்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (25) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினால் குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, மாவட்ட ரீதியில் போக்குவரத்து செலவுகளுக்கு உட்பட்டு,கொழும்பில் ஆகக் குறைவாக ரூ. 1,150 எனும் விலையிலும் அம்பாறையில் ரூ. 1,252 எனும் விலையிலும்
யாழ்ப்பாணத்தில் உச்ச பட்சமாக ரூ. 1,259 எனும் விலையிலும் விற்பனை செய்யுமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
+1
+1