பிரதமர் மஹிந்த ராஜபக்ஷாவின் ஒருங்கிணைப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக தனக்கு தகவல் கிடைக்கவில்லை என்று கௌசி வெட்டிகாரராச்சி தெரிவித்துள்ளார்.
நடிகை, மொடல் மற்றும் முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளர் கௌசி வெட்டிகாரராச்சி, இன்று காலை வெளியிட்ட பேஸ்புக் பதிவில் இதனை தெரிவித்தார்.
தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக சிலர் கூறியுள்ளதாக கூறினார். அப்படி நீக்கப்பட்டாலும் தனது இலக்குகளை அடைவதற்கான பயணத்தைத் தொடருவார் என்று கூறினார்.
பிரதமர் அலுவலகத்தில் அவர் செய்த பணிக்கு மாத சம்பளம் பெறவில்லை என்று கூறினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்காக உழைப்பதே தனது முக்கிய குறிக்கோளாக இருந்தது என்று அவர் கூறுகிறார்.
இவ்வளவு பேர் ஏன் பொறாமைப்படுகிறார்கள் என்பதையும், அவரது நியமனம் குறித்து கோபம் கொண்டிருப்பதையும் அவரால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு செயலாளராக நடிகை கௌசி நியமிக்கப்பட்டிருந்ததார். தற்போது அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.