25.2 C
Jaffna
December 17, 2024
Pagetamil
கிழக்கு

ஆலயத்திலிருந்து திரும்பிய போது நடந்த கோரச்சம்பவம்: ஆசிரியை பலி!

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது கணவர் மற்றும் பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (25) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் திருகோணமலை, பாலையூற்று சென்லூட்ஸ் வித்தியாலய ஆசிரியை பாமதி ஞானவேல் (49) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவரது கணவர் மூதூர் வைத்தியசாலையிலும், 7 வயதான பிள்ளை திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெருகல் முருகன் ஆலயத்திற்கு முச்சக்கரவண்டியில் சென்று திரும்பி வருகின்றபோது காரொன்று கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியின் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சேருவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காணி ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செயலமர்வு

east tamil

திருக்கோணமலை மட்கோ சந்தியில் வெள்ளம்

east tamil

கன்னியாவில் அபரக்கிரியைகளுக்கான அனுமதி

east tamil

திருகோணமலையில் ஆலய விக்கிரகங்கள் திருட்டு

east tamil

UPDATE – சல்லி கோவில் ஆக்கிரமிப்பு

east tamil

Leave a Comment