மாலைசந்தை பிள்ளையார் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாலை சந்தை பிள்ளையார் ஆலயத்தின் திருவிழா அண்மையில் நடந்து முடிந்திருந்தது. கரவெட்டி பகுதியில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஒருவர் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டது தெரிய வந்ததையடுத்து, ஆலய திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் 120 பேர் பிசிஆர் சோதனைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆலய நிர்வாகம், பூசகர்கள், மங்கள வாத்தியக்காரர்கள் மற்றும் முகநூல் வீடியோக்கள் வழியாக அடையாளம் காணப்பட்டவர்கள் என 120 பேர் நேற்று பிசிஆர் சோதனைக்கு அழைக்கப்பட்டனர்.
அவர்களில் 70 பேர் மாத்திரம் நேற்று பரிசோதனையில் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1