Pagetamil
இலங்கை

இஷாலினிக்கு நீதி கோரி யாழ் நகரில் போராட்டம்!

முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதிகோரி யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழில் உள்ள மகளிர் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இணைந்து யாழ் நகர மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே, சிறுவர்களின் எதிர்காலத்தை சிதைக்காதே, வேண்டாம் வேண்டாம் வன்முறை வேண்டாம், பாதுகாப்போம் பாதுகாப்போம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம், மலையகச் சிறுமிக்கு நீதி வேண்டும், பாலியல் வன்முறை வேண்டவே வேண்டாம், பாதுகாப்போம் பாதுகாப்போம் சிறுவர் உரிமையைப் பாதுகாப்போம் உள்ளிட்ட பல்வேறு கோசங்களை இதன்போது எழுப்பியிருந்தனர்.

இந்த போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன், புதிய ஜனநாயக அரசியல் கட்சியின் பொதுச் செயலாளர் செந்தில்வேல், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனைவியை சுட்டுக்கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான திருகோணமலை கடற்படை சிப்பாய் கைது!

Pagetamil

பொது மன்னிப்பில் ரஷ்ய பெண்ணும் விடுதலை

Pagetamil

சுனாமி 20: ‘பேபி 81’ இற்கும் 20 வயது!

Pagetamil

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

east tamil

மதுபோதையில் டிப்பர் செலுத்தியவரால் கொடூரம்: கிளிநொச்சியில் 2 வயது சிறுமி பலி!

Pagetamil

Leave a Comment