25.8 C
Jaffna
December 25, 2024
Pagetamil
இலங்கை

அரியாலையில் துப்பாக்கிச்சூடு!

அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் நேற்று இரவு சட்டவிரோத மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தின் மீது பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது. எனினும் உழவு இயந்திரத்தில் பயணித்த மூவரும் தப்பிச் சென்றுள்ளதாக யாழ்ப்பான பொலிஸார் தெரிவித்தனர்.

உழவு இயந்திரத்தின் ரயர் பகுதிமீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையால் உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது.

இன்று அதிகாலை 1 40 மணி அளவில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தினை கடமையில் இருந்த போலீசார் மறித்த போது வாகனம் நிறுத்தாது சென்றதன் காரணமாக உழவு இயந்திரத்தின் சில்லுபகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து உழவு இயந்திரத்தில் பயணித்த மூவரும் தப்பிச் சென்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

east tamil

மதுபோதையில் டிப்பர் செலுத்தியவரால் கொடூரம்: கிளிநொச்சியில் 2 வயது சிறுமி பலி!

Pagetamil

ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய அட்டை

Pagetamil

ஒரு கிலோ கோழி இறைச்சி இலஞ்சம் வாங்கியவர்கள் கைது!

Pagetamil

பரந்தனில் பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி

east tamil

Leave a Comment