இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர வீதி விபத்தில் காயமடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் (21) தனது அன்றாட பயிற்சிக்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கொழும்பு, சென்ட் பிரிட்ஜெட் கொன்வென்ட் அருகே நடந்த இந்த விபத்தில் தயாசிறிக்கு நெற்றியில், கைகளில், கால்களில் காயம் ஏற்பட்டது.
இது ஒரு சாதாரண விபத்து, காயங்களுக்கு சிகிச்சை பெற்று அதே நாளில் வீடு திரும்பியதாக தயாசேகர தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1