கினிகத்தேனையிலிருந்து கம்பளை வரை அதி வேகமாக பயணித்த முச்சக்கர வண்டி விபத்திற்குள்ளானதில், அதன் சாரதி காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கினிகத்தேனை- நாவலப்பிட்டி பிரதான வீதியின் மீப்பிட்டிய பகுதியில் நேற்று (21) பகல் இந்த விபத்து நேர்ந்தது.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாத முச்சக்கர வண்டி, லொறியொன்றுடன் மோதியது. பின்னால் வந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின.
விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்தது. முச்சக்கர வண்டி சாரதியின் பொறுப்பற்ற தன்மையே விபத்திற்கு காரணமென பொலிசார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1