மட்டக்களப்பிற்கு மேலும் 02 இலட்சம் தடுப்பூசிகள்; நாளை முதல் செலுத்தப்படும்: மாகாணம் கடப்பவர்களுக்கு விசேட எச்சரிக்கை!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரண்டு தினங்களில் இரண்டு இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அது கிடைத்த பின்னர் 30 வயதிற்கு மேற்பட்ட 88 வீதமானவர்களுக்கு செலுத்தக்கூடியதாக இருக்கும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாகவும் அதனால் மட்டக்களப்பில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 88 வீதமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 28 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இருவர் மரணமடைந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 7863கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 112பேர் மரணமடைந்துள்ளதுடன் 6100பேர் குணமடைந்து வீடுசென்றுள்ளனர்.

கடந்தவாரம் 471கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 78000தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன் 60வயதுக்கு மேற்பட்ட 90வீதமானவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் டாக்டர் மயூரன் தெரிவித்தார்.

அத்துடன் முறையான அனுமதி இன்றி மாகாணம் விட்டு மாகாணம் செல்வது தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை முறையாக கடைப்பிடித்து மாகாணம் விட்டு மாகாணம் செல்லவேண்டாம் என்றும் அவ்வாறு செல்பவர்களால் தான் டெல்ரா வகையான கொரோனா வைரஸ் திரிபுகள் வருவதற்கு சந்தர்ப்பம் உள்ளதாகவும், இவ்வாறு செல்பவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அனுமதி பெற்று செல்லுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்