25.6 C
Jaffna
December 23, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

வீட்டுக்கு வெளியில் தங்க வைக்கப்பட்டிருந்த இஷாலினி; தீக்காயத்துடன் வந்து தண்ணீர் கேட்டார்; மீன் தொட்டிக்குள் பாய்ந்தார்: பதைபதைக்க வைக்கும் தகவல்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் உயிரிழந்த பணிப்பெண்ணான சிறுமி இஷாலினி ஜூட் குமார் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

3ஆம் திகதி ரிஷாத் பதியுதீன் வீட்டில் தீக்காயமடைந்த 16 வயதான சிறுமி கடந்த 15ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது தாயார், கடந்த 6ஆம் திகதி ரிஷாட்டின் இல்லத்திற்குச் செல்லவிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளரான பிரனீத்தா வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

யூரியூப் ஊடகத்திற்கு இன்று புதன்கிழமை அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறிய தகவல்களின் சாரம்சம் வருமாறு-

டயகம சிறுமி இஷாலினி, பொன்னையா என்ற டயகம பிரதேசத்தைச் சேர்ந்த தரகர் ஊடாகவே ரிஷாட்த்தின் இல்லத்திற்குத் தொழில்பெற்றுச் சென்றார். இதற்காக பொன்னையாவுக்கு 5000 ரூபா அளிக்கப்பட்டதாகவும், இஷாலினி மற்றும் பொன்னையா பயணம் செய்த முச்சக்கர வண்டிக்கு வாடகையான 5000 ரூபாவும் ரிஷாத் வீட்டிலிருந்து கொடுக்கப்பட்டது.

இஷாலினி எப்பொழுது வேலைக்கு சென்றார் என்பதை தாயாரால் குறிப்பாக சொல்ல முடியவில்லை. எனினும், தரகர் பொன்னையா 2020ஆம் ஆண்டு நவம்பரில் பணிப்பெண்ணாக சென்றதாக குறிப்பாக கூறியுள்ளார்.

மாதாந்தம் 20,000 ரூபா சம்பளத்திற்காக இஷாலினி சென்றார். இதுவரை இஷாலினியின் தாயாருக்கு இரண்டு இலட்சம் ரூபா பொன்னையா ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டிற்குள் இஷாலினிக்கு அறையெதுவும் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை.  ரிஷாத்தின் வீட்டு வளாகத்தில் ஒதுக்குப் புறமாக இருந்த பழைய அறையில் இஷாலினி தங்கவைக்கப்பட்டார். அதில் இரும்பினாலான கட்டில் மட்டுமே இருந்தது.

இஷாலியின் தாயார் 4 தடவைகள் அவரை சந்திக்க அந்த வீட்டிற்கு வந்திருக்கிறார். எனினும், இஷாலினி புத்தளம் வீட்டில் இருப்பதாகக்கூறி தாயாரா அனுப்பி வைத்துள்ளனர்.

அண்மையில் ஒருநாள், இஷாலினி தாயாருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ரிஷாத் வீட்டு ஆண் பணியாளரின் தொலைபேசி ஊாடாக பொன்னையாவிற்கு அழைப்பேற்படுத்திய சந்தர்ப்பத்தில் உரையாடியுள்ளார். அப்போது இஷாலினி பேசிய தொலைபேசி அவுட் ஸ்பீக்கரில் விடப்பட்டிருந்தது, அந்த சந்தர்ப்பத்தில்தான் தன்னை தும்புத்தடியால் அடிப்பதாக இஷாலினி முறையிட்டுள்ளார்.

அது குறித்து இஷாலினியின் தாயார், ரிஷாத் பதியுதீனின் மனைவியிடம் கேட்டுள்ளார். எனினும், அதனை மறுத்த ரிஷாத் மனைவி, வேலைகளை விரைவாக செய்யாத காரணத்தினால்தான் திட்டியதாக கூறியுள்ளார்.

அப்போது, இஷாலினியை வீட்டுக்கு வருமாறும், தான் அவருக்கு பதிலாக வேலைக்கு வருவதாகவும் தாயார் குறிப்பிட்டுள்ளார். எனினும், இஷாலினி அதனை மறுத்துள்ளார்.

மகள் தீ வித்தில் சிக்கிய பின்னர் தகவலறிந்து தாயார் ரிஷாத் வீட்டிற்கு வந்து, பின்னர் வைத்தியசாலை சென்றா். மகள் நீண்டநாளாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானதை அறியவில்லையென தாயார் தெரிவித்துள்ளார். “மகள் பூப்போன்றவர்“ என தெரிவித்துள்ளார்.

இஷாலினி தீ்க் காயமடைந்த சந்தர்ப்பத்தையும் பிரனீத்தா வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

தீக்காயமடைந்த நிலையில் வீட்டின் பிரதான கூடத்திற்கு வந்த இஷாலினி தண்ணீர் கேட்டதாகவும், அதன் பின் அங்கிருந்த மீன்தொட்டியில் பாய்ந்ததாகவும் ரிஷாட்டின் இல்லத்திலிருந்தவர்கள் தன்னிடம் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.

தரகர் பொன்னையா மிகுந்த மனஉளைச்சலுடன் இருப்பதாகவும், தன்னால் உறங்க முடியாமல் இருப்பதாகவும் தன்னிடம் குறிப்பிட்டதாகவும் கூறியுள்ளார்.

சிறுமி வைத்தியசாலையில் 12 நாள் சிகிச்சை பெற்ற போதும், பொலிசார் மரண வாக்குமூலம் பெறவில்லையென்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இப்படியான கொடுமைகள் தொடர்ந்து நீடிக்கின்ற போதும், ஆளும் மற்றும் எதிர்தரப்பினர் இது குறித்து ஆக்கபூர்வமாக செயற்படுவதில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
2
+1
2
+1
3
+1
4

இதையும் படியுங்கள்

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

east tamil

எட்கா ஒப்பந்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் – கலாநிதி நந்தலால் வீரசிங்க

east tamil

Leave a Comment