கண்டி, ஒகஸ்டவத்த தடுப்பூசி மையத்தில் வயதான பெண்மணி ஒருவருக்கு இரண்டு டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் ஏற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முதல் டோஸ் செலுத்தி சிறிது நேரத்தின் பின்னர் இரண்டாவது டோஸை ஏற்றிய போது அவர் மயக்க நிலையை அடைந்துள்ளதுடன், மற்றும் சில சிக்கல்களை உருவாகியதையடுத்து அவருக்கு உடனடியாக ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர், பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது கணவர் பேராதனை பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளிடம் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
இந்த சம்பவம் தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார்.
இப்படியான உலகின் முதலாவது சம்பவமாக இது இருக்கலாமென கருதப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
4
+1
+1
1