இலங்கை

மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்: இரண்டு தடுப்பூசிகளும் அடுத்தடுத்து செலுத்தப்பட்டது!

கண்டி, ஒகஸ்டவத்த தடுப்பூசி மையத்தில் வயதான பெண்மணி ஒருவருக்கு இரண்டு டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் ஏற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதல் டோஸ் செலுத்தி சிறிது நேரத்தின் பின்னர் இரண்டாவது டோஸை ஏற்றிய போது அவர் மயக்க நிலையை அடைந்துள்ளதுடன், மற்றும் சில சிக்கல்களை உருவாகியதையடுத்து அவருக்கு உடனடியாக ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர், பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தடுப்பூசி மையத்தில் தனக்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டதாக வைத்தியர்களிடம் அப்பெண் தெரிவித்துள்ளார்.

அவரது கணவர் பேராதனை பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளிடம் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

இந்த சம்பவம் தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார்.

இப்படியான உலகின் முதலாவது சம்பவமாக இது இருக்கலாமென கருதப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
1

Related posts

கொரோனாவிற்கு பயந்து தலைமறைவான நூற்றுக்கணக்கான புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள்!

Pagetamil

சூறாவளி தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம்: மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தல்!

Pagetamil

பல பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!