இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய இந்திய அணி, 2-0 என தொடரையும் கைப்பற்றியது.
போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய இலங்கை, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ஓட்டங்களை பெற்றது.
அசலங்க 65, அவிஷ்க பெர்னாண்டோ 50 ஓட்டங்களை பெற்றனர். கடந்த போட்டியில், பின்வரிசையில் கலக்கிய சமிக்க கருணாரத்ன, இந்த போட்டியில் அதிரடியாக ஆடி, ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் யவேந்திர சாஹல், புவனேஸ்குமார் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பதிலளித்து ஆடிய இந்திய சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. 5/116, 7/193 என நெருக்கடியில் இருந்தது. அதன் பின் ஜோடி சேர்ந்த பந்து வீச்சாளர்கள் புவனேஸ்குமார், தீபக் சாகர் மேலதிக விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தனர்.
இந்தியா 49.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 277ஓட்டங்களை பெற்றது.
தீபக் சாகர் ஆட்டமிழக்காமல் 69, சூர்யகுமார் யாதவ் 53 ஓட்டங்களை பெற்றனர்.
பந்து வீச்சில் வணிந்து ஹசரங்க 37 ஓட்டங்களிற்கு 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஆட்ட நாயகன் தீபக் சாஹர்.