நடிகர் தனுஷினால் மற்றொரு நடிகைக்கும் திருமணம் தடைப்பட்டு விட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.
பார்த்தால் இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்பதை போல தோன்றும் தனுஷ் புகுந்து விளையாடியதில் பல நடிகைகளின் திருமணம் பாதியில் நின்றதும், விவாகரத்து ஆனதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இப்படி நமது சுள்ளான் நடிகர் சுளுக்கெடுத்த லிஸ்ட் கொஞ்சம் பெரிது.
தமிழ் சினிமா துறையில் நிச்சயதார்த்ததுடனோ நிற்பதோ அல்லது திருமணம் நடைபெற்ற பின்னரே பிரிந்தவர்கள் நிறைய உண்டு. முன்னணி நடிகைகள் பலரும் இப்படி திக்கு திசை தெரியாமல் காதல் உறவை முறித்த போது இடிதாங்கியாக நின்றது நமது சுள்ளான்தான்.
ஒரு காலத்தில் கனவு கன்னியாக இருந்தவர் திரிஷா. 2015-ஆம் ஆண்டு தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் இடையே காதல் மலர்ந்து நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. அந்த ஆண்டு இறுதியே இருவருக்கும் திருமணம் நடைபெறும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் என இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பாதியிலேயே நின்றது. அப்போது அவருடைய நிச்சயதார்த்தம் நின்றதற்கு காரணம் சுள்ளான் நடிகர் தான் என கூறப்பட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் போதே அமலா பால் 2014ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் இந்த திருமணம் நீடிக்கவில்லை. இருவரும் 2017ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இதற்கு காரணமும் அவர் தான் எனக் கூறப்பட்டது. இதனை ஏ.எல்.விஜய்யின் தந்தையும், தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பனே கூறியிருந்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட அமலாபாலை, தனுஷ் தான் தயாரித்த அம்மா கணக்கு படத்தில் நடிக்க வைத்தார். அதிலிருந்தே அமலா பாலுக்கும், ஏ.எல்.விஜய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார்.
தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளார் ஜிலேபி நடிகை மெஹ்ரீன் பிர்சடா. சந்தீப் கிஷன், விக்ராந்த் நடித்த நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மெஹ்ரீன் பிர்சாடா. அதனை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தமிழில் நடித்த நோட்டா, தனுஷ், சினேகா நடிப்பில் வெளியான பட்டாஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிசியாக நடித்து வரும் இவருக்கும், முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரனான பவ்யா பிஷ்னோய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர் அரண்மனையில் தட புடலாக நடைபெற்ற நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திடீரென திருமணம் இனி நடைபெறாது என தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார் மெஹ்ரீன் பிர்சடா. இதற்கும் தனுஷ் தான் காரணம் எனக் கிசு கிசுக்கப்படுகிறது.
நன்றாக வளர்ந்து வரும் நேரத்தில் ஏன் திருமணம் செய்துக் கொள்கிறாய் என நடிகையின் மனதை தனுஷ் கலைத்ததாகவும், இதனால் நடிகை திருமணத்தை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.