வீட்டுக்கு அருகில் புதைக்கப்பட்ட பெருந்தொகை பணத்துடன் மச்சான் சிக்கினார்!

Date:

பாதாள உலக கும்பல் உறுப்பினர் நதுன் சிந்தக அல்லது ‘ஹரக் கட்டா’ என்பவரின் நெருங்கிய கூட்டாளியான சரித் சந்தகெலும் என்ற ‘ரன் மல்லி’ என்பவரின் மைத்துனர் ரூ .103.9 மில்லியன் ரொக்கத்துடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னிப்பிட்டியிலுள்ள சந்தேக நபரின் வீட்டிற்கு அருகில் பணம் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

போதைப்பொருள் விற்பனையால் பணம் பெறப்பட்டதாக சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த மாதத்தில் இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு பெருந்தொகை போதைப்பொருள், ஆயுதம் கொண்டு வரப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குழுவின் பணமே கைப்பற்றப்பட்டதாக பொலிசார் நம்புகின்றனர்.

தற்போது டுபாயில் இருக்கும் பாதாள உலக கும்பல் உறுப்பினர் ‘ஹரக் கட்டா’வினால் 298 கிலோ ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்பட்ட முயற்சி அப்போது முறியடிக்கப்பட்டது.

பணத்துடன் கைதான சந்தேக நபர் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கிரிக்கெட் போட்டிக்கு சென்ற மாணவர்கள் பேருந்து விபத்தில் பலி

கண்டி, புனித சில்வெஸ்டர் கல்லூரிக்கும் வித்யார்த்தா கல்லூரிக்கும் இடையே நடைபெறும் வருடாந்திர...

ஊழல் குற்றச்சாட்டில் பிரசன்ன ரணதுங்கவுக்கு ரூ.25 மில்லியன் அபராதம்!

கொலன்னாவவின் மீத்தோட்டமுல்ல பகுதியில் நிலத்தை மீட்க அனுமதி வழங்குவதற்காக ஒரு தொழிலதிபரிடம்...

இராணுவத்தளபதியை பணியிலிருந்து விடுவித்தது ட்ரம்ப் நிர்வாகம்!

பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்