இன்றைய வானிலை

Date:

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில்பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும்.

காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல்நிலை: கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

-வளிமண்டலவியல் திணைக்களம்-

spot_imgspot_img

More like this
Related

மட்டு ஆரையம்பதியில் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது

மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி  மாரியம்மன் கோவில் முன்றலில்  கடந்த மாதம் மட்டக்களப்பு...

பைத்தியக்கார ஈரானை கடுமையாக தாக்குவோம்!

ஹோர்முஸ் ஜலசந்தியில் தெஹ்ரான் தொடர்ந்து கப்பல்களைத் தாக்கினால், ஈரான் மீதான அமெரிக்காவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்