25.1 C
Jaffna
January 13, 2025
Pagetamil
இலங்கை

பொலிஸ் காவலில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு: 5 பொலிசாருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

பொலிஸ் காவலில் உயிரிழந்த ஒருவரின் பிள்ளைகளிற்கு 1 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறு உயர்நீதிமன்றம் 5 பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்பவம் நடந்த போது 7 வயதாக இருந்த மகன், ஒரு மாதமுடைய மகள் ஆகியோருக்கே இழப்பீடு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

தீர்ப்பை வழங்கிய நீதிபதி ப்ரீத்தி பத்மன் சுரசேன, ஒரு இழப்பீடாக வழங்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபாயை, ரூ. 500,000 வீதம் சம அளவாக பகிர்ந்து இரண்டு குழந்தைகளின் பெயர்களில் ஒரு அரச வங்கியில் வைப்பு செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

இதுதவிர, உயர்நீதிமன்றம் இழப்பீடாக ஒரு மில்லியன் ரூபாவை வழங்கும். அதில் ரூ .750,000 ஐ அரசு செலுத்த வேண்டும். மீதி பணத்தை  பொலிஸ் உத்தியோகத்தர்களும் தலா ரூ .50,000  வீதம் தனிப்பட்ட முறையில் செலுத்த வேண்டும். இழப்பீடாக உத்தரவிடப்பட்ட தொகை தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

பேலியகொட பொலிஸ் நிலைத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, உயிரிழந்த சாதிக் ஷியாமன் விக்கிரமராச்சியின் பிள்ளைகளிற்கே இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

உயிரிழந்தவரின் மனைவி நில்மினி விஜேசேகர, பிரதிவாதிகள் கணவரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதி ப்ரீத்தி பத்மன் சூரசேன, நீதிபதி ஜனக் டி சில்வா மற்றும் நீதிபதி மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட ஆயம், மனுதாரரின் கணவர் சித்திரவதையிலிருந்து விடுபடவும், அடிப்படை உரிமைகளை பேணவுமான அரசியலமைப்பின்ல் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீறியுள்ளதாக தீர்ப்பளித்தனர்.

பெப்ரவரி 25, 2017 அன்று அதிகாலை 4.00 மணியளவில், ஐந்து பொலிஸ் கான்ஸ்டபிள்கள்- சுமேத துஷங்க, இந்திக பிரியதர்ஷன, சானக ருக்மன், அஜித் ஜெயலால் மற்றும் லஹிரு ரோஷன் ஆகியோர்- கடுவெலவில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்து கணவர் சாதிக் ஷியாமனைக் கைது செய்து பேலியகொட காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக மனுதாரர் தெரிவித்தார். .

அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கான காரணங்கள் குறித்து விசாரித்தபோது, ​​ஒரு கொள்ளை தொடர்பாக சாதிக் ஷியாமனிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ய விரும்புவதாக பிரதிவாதிகள் தெரிவித்தனர்.

பெப்ரவரி 25, 2017 அன்று காலை 9.00 மணியளவில், மனுதாரர் பேலியகொட காவல் நிலையத்தில் கணவரை பார்வையிடச் சென்றிருந்தார். அந்த நேரத்தில் தான் அவரது கணவர் இறந்துவிட்டதாகவும், உடல் கொழும்பு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கார் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சாதிக் ஷியாமன் கைது செய்யப்பட்டார் என்றும், அவரது கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டபோது மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதாகவும்,அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஒரு உயர் போலீஸ் அதிகாரி மனுதாரருக்கு விளக்கமளித்ததாக மனுதாரர் தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி,பொலிசாரின் ந்த விளக்கம் வெளிப்படையாக தவறானது என்று மனுதாரர் கூறுகிறார். பிரேத பரிசோதனை நடத்திய நீதித்துறை மருத்துவ அதிகாரி, மனுதாரரின் கணவரின் உடலில் இருபத்தெட்டு வெளிப்புற காயங்களை அவதானித்திருந்தார்.

ஆலோசகர் நீதித்துறை மருத்துவ அதிகாரி இந்த காயங்களை சமீபத்திய காயங்களின் அறிகுறிகளாக விவரித்தார் மற்றும் காயத்தின் வடிவம் சித்திரவதைகளினால் ஏற்பட்டவையாக விபரித்தார்.

பிரேத பரிசோதனையின் படி, மனுதாரரின் கணவரின் மரணம் மூச்சுத்திணறலால் அல்ல, பொலிசாரின் தாக்குதலாலலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.

தண்டனைச் சட்டத்தின் 296 வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்திற்காக ஐந்து பிரதிவாதிகள் மீது குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார் சட்டமா அதிபர்.சம்பந்தப்பட்ட நீதிவான் நீதிமன்றத்தில் சுருக்கமற்ற விசாரணையை நடத்தப்பட்டது.

சுருக்கமற்ற விசாரணையின் முடிவிற்குப் பிறகு, இந்த வழக்கு மீண்டும் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டது. அதன்பிறகு  சித்திரவதைக்கு எதிரான மாநாட்டின் பிரிவு 2 (4) இன் கீழ் ஐந்து பிரதிவாதிகளிற்கும் எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை இடம்பெற்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மன்னார் வளைகுடாவில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

east tamil

நடுவீதியில் வைத்து மாணவியை கடத்திச் சென்ற மச்சான்!

Pagetamil

புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் சத்தியப்பிரமாணம்

east tamil

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் காலமானார்

east tamil

மனைவியின் காதை வெட்டிய கணவனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

east tamil

Leave a Comment