விசுவமடு, பாரதி வித்தியாலய மாணவர்கள் 24 பேர் குளவிக்கொட்டிற்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
முல்லைத்தீவு, பாரதி மகா வித்தியாலயத்தின் கற்றல் மத்திய நிலையத்திற்கு கல்வி செயற்பாட்டிற்காக நேற்று (16) சென்ற மாணவர்களே குளவிக் கொட்டிற்கு இலக்காகினர்.
இந்த கிராமத்தில் இணைய வசதியின்மையால், இணைய வசதியற்ற பிரதேசங்களிற்காக அரசாங்கம் உருவாக்கிய கற்றல் மத்திய நிலைய திட்டத்தின் கீழ், பாரதி மகா வித்தியாலயத்தில் மத்திய நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மத்திய நிலையத்திற்கு சென்ற மாணவர்களே குளவிக் கொட்டிற்கு லக்காகினர்.
24 மாணவர்கள் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 8 பேர் மேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்.
ஏனைய 24 மாணவர்களும் மூங்கிலாறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.