முடக்கப்பட்ட பருத்தித்துறை நகரில் இன்று இயங்கிய வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று பிசிஆர் சோதனையில், வங்கியொன்றில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.
இதையடுத்து வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நேற்று இரவு தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பருத்தித்துறை நகர பகுதியில் இன்று எழுமாற்றான அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 7 பேருக்கு தொற்று உறுதியானது.
இதில் இருவர், பருத்தித்துறை நகரில் உள்ள தனியார் வங்கியொன்றின் உத்தியோகத்தர்கள்.
இதையடுத்து, வங்கி ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், வங்கியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த பகுதியில் 49 பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் நடத்தப்பட்ட அன்டிஜன் சோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதியானது.
மேலும் 33 பேரின் பிரிஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.