26 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இந்தியா

தேமுதிக தலைவர் விஜயகாந்த்-முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். முதலமைச்சர் நிவாரண நிதிக்காக தேமுதிக செயலாளர் விஜயகாந்த் 10 லட்சம் ரூபாயை முதல்வரிடம் வழங்கினார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் இல்லத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் தேமுதிக தரப்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், பொருளாளர் பிரேமலதா துணை செயலாளர் எல்.கே சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்திருந்தார்.

அதனை தொடர்ந்து மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகு முதன் முறையாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

தமிழகத்தில் வாக்காளர் அதிகரிப்பு

Pagetamil

ஆளுநர் வெளிநடப்பு முதல் குரல் வாக்கெடுப்பு தீர்மானம் வரை: தமிழக சட்டப் பேரவைச் சர்ச்சை!

Pagetamil

இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

east tamil

Leave a Comment