25.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

இன்று திருமணக் கலப்பு: தூக்கில் தொங்கி உயிரை மாய்த்த முன்னணி உறுப்பினர்!

சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

கொடிகாமம், இராமாவில் பகுதியை சேர்ந்த சி.கஜேன் (28) என்பவரே இன்று (11) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சாவகச்சேரி பிரதேசசபைக்கு நியமன பட்டியல் உறுப்பினராக தெரிவான இவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் பிளவு ஏற்பட்ட போது, மணிவண்ணன் தரப்புடன் இணைந்து செயற்பட்டு வந்தார்.

இன்று அவருக்கு திருமண கலப்பு இடம்பெறவிருந்தது.

நேற்று இரவு தாய், சகோதரனுடன் சிறிய வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வழக்கமாக தர்க்கம் ஏற்பட்டால் வீட்டை விட்டு வெளியேறி, பக்கத்திலுள்ள காணியில் இருந்து விட்டு, சற்று நேரம் கழித்து வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

நேற்று அவர் வீட்டை விட்டு வெளியேறிய போதும், அவர் சற்று நேரத்தினால் திரும்பி வருவார் என உறவினர்கள் நினைத்திருந்தனர். எனினும், நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பாததையடுத்து, அவரை தேடியுள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். வீட்டிற்கு அயலிலுள்ள காணியொன்றில், தவறான முடிவெடுத்து, உயிரை உயிரை மாய்த்த நிலையில் காணப்பட்டார்.

தற்கொலை முடிவெடுப்பவர்கள் தமது குடும்பத்தினரை தீராத துயரத்தில் ஆழ்த்தி செல்கிறார்கள். யாருக்கேனும் தனிமை, உதவி தேவையான நிலை காணப்பட்டால் உதவி எண்களை அழையுங்கள்.

Suicides and Prevention Tips in Sri Lanka and Hotline Call Centre
What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
0
+1
1
+1
5
+1
7

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சியின் முடிவுகளுக்கு ஏனையவர்கள் ஒத்துவர வேண்டுமென்பது முறையற்றது: செல்வம் எம்.பி

Pagetamil

UPDATE – சல்லி கோவில் ஆக்கிரமிப்பு

east tamil

வவுனியா குள ஆற்றுப்பகுதியில் அரச ஊழியரின் சடலம் மீட்பு

east tamil

திருமலையில் இலக்கிய நிகழ்வு – “மனதில் உறுதி வேண்டும்”

east tamil

காங்கேசன்துறை- நாகை படகுச்சேவை; மேம்பட்ட வசதிகளுடன் ஜனவரியில் ஆரம்பம்: வரிச்சலுகையுடனான விற்பனை நிலைய வசதிக்கும் ஏற்பாடு!

Pagetamil

Leave a Comment