இணையத்தில் கற்பிப்பதாக கூறி மாணவிகளிடம் அந்தரங்கப்படம் கேட்ட ஆசாமி கைது!

Date:

தன்னை ஆசிரியராக காண்பித்துக் கொண்டு மாணவிகளின் அந்தரங்க புகைப்படங்களை கோரிய ஆசாமியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கங்கீம பகுதியில் உள்ள பொரலுஹேனவில் வசிக்கும் 29 வயதுடையவரே கைதாகினார்.

மாணவிகளின் தொலைபேசி எண்களை கண்டறிந்து அவர்களுடன் தொடர்பு கொண்ட ஆசாமி, தன்னை  ஆசிரியராக அறிமுகப்படுத்தியுள்ளார். மாணவிகளிற்கு சுகாதாரம் பாடம் கற்பிக்கும் போர்வையில், மாணவிகளின் பிறப்புறுப்பு தொடர்பில் விசாரித்துள்ளார். அத்துடன், சுகாதார கல்வியென்ற போர்வையில் ஆபாச படங்களையும் அனுப்பியுள்ளார்.

அந்த நபர் மீது 6 பாடசாலை மாணவிகள் முறைப்பாடளித்தனர். பிடிகல பொலிசாரிடம் 4 மாணவிகளும் கரந்தெனிய பொலிசாரிடம் 2 மாணவிகளும் முறைப்பாடளித்துள்ளனர்.

மாணவிகளை நேரில் சந்திக்கும்படியும் அழைத்துள்ளார். தனது பெற்றோருடன் மாணவியொருவர் நேரில் சென்றதையடுத்து, அவர் கைதானார்.

அவர் திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளன. மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்கிறார்.

இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.

spot_imgspot_img

More like this
Related

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...

ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்