27.4 C
Jaffna
December 15, 2024
Pagetamil
விளையாட்டு

விம்பிள்டன் மகளிர் சம்பியன் அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி!

லண்டனில் நடந்துவரும் கிராண்ட்ஸ்லாம்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அவுஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி சம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிஆட்டத்தில் செக் குடியரசு வீராங்கனை கரோனாலினா பில்ஸ்கோவாவை வீழ்த்தி இந்த பட்டத்தை பார்டி கைப்பற்றினார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் அவுஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டியை எதிர்த்து செக் குடியரசு வீராங்கனை கரோலினா பில்ஸ்கோவா மோதினார்.

பில்ஸ்கோவாவை, 6-4, 6-7, 6-3 என்ற செட்களில் போராடி வீழ்த்தி மகுடத்தைகைப்பற்றினார் பார்டி.

கடந்த 2012ஆம் ஆண்டுக்குப்பின் விம்பிள்டன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 3 செட்கள் நடப்பது இதுதான் முதல்முறையாகும்.

9 ஆண்டுகளுக்குமுன் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ராண்ட்வான்ஸ்கா இடையிலான ஆட்டம் 3 செட்களை கொண்டதாக இருந்தது. அதன்பின் இந்த ஆட்டம் அமைந்துள்ளது.

முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய பார்டி 5-2 என்ற கேம் கணக்கில் முன்னிலையில் இருந்தார். அதன்பின் பில்ஸ்கோவா முன்னேற முயன்றாலும் முடியவி்ல்லை. இதனால் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் பார்டி கைப்பற்றினார்.

2வது செட்டில் பில்ஸ்கோவா ஆதிக்கம் செலுத்தினால், இருப்பினும் பார்டியும் கடும் நெருக்கடி கொடுத்தபோதிலும் 6-7 என்ற கணக்கில் பில்ஸ்கோவா வென்றார். வெற்றியாளரை முடிவு செய்யும் கடைசி செட்டில் இருவரும் கடுமையாக மோதினர். ஆனால், பார்டியின் நுணுக்கமான ஷொட்கள், ப்ளேஸ்கள், ஏஸ்களை சமாளிக்க முடியாமல் 6-3 என்ற கணக்கில் பில்ஸ்கோவா தோல்வி அடைந்தார்.

ஆஷ்லி பார்டிக்கு இது 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்ற பார்டி, இப்போது விம்பிள்டன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆண்: மருத்துவ அறிக்கையில் உறுதி

Pagetamil

ஐபிஎல் 2025: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!

Pagetamil

Leave a Comment