கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை மிருதுளா விஜய், சின்னத்திரை நடிகரான யுவ கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.
மிருதுளா விஜய் நூறாம் நாள் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு ஜெனிபர் கருப்பையா, கடன் அன்பை முறிக்கும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு மலையாள படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
மிருதுளாவுக்கும் , மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் யுவ கிருஷ்ணாவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் அவர்களின் திருமணம் கோவிலில் எளிமையாக நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சியில் இருவீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இவர்களது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1