தன்னை ஆசிரியராக காண்பித்துக் கொண்டு மாணவிகளின் அந்தரங்க புகைப்படங்களை கோரிய ஆசாமியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கங்கீம பகுதியில் உள்ள பொரலுஹேனவில் வசிக்கும் 29 வயதுடையவரே கைதாகினார்.
மாணவிகளின் தொலைபேசி எண்களை கண்டறிந்து அவர்களுடன் தொடர்பு கொண்ட ஆசாமி, தன்னை ஆசிரியராக அறிமுகப்படுத்தியுள்ளார். மாணவிகளிற்கு சுகாதாரம் பாடம் கற்பிக்கும் போர்வையில், மாணவிகளின் பிறப்புறுப்பு தொடர்பில் விசாரித்துள்ளார். அத்துடன், சுகாதார கல்வியென்ற போர்வையில் ஆபாச படங்களையும் அனுப்பியுள்ளார்.
அந்த நபர் மீது 6 பாடசாலை மாணவிகள் முறைப்பாடளித்தனர். பிடிகல பொலிசாரிடம் 4 மாணவிகளும் கரந்தெனிய பொலிசாரிடம் 2 மாணவிகளும் முறைப்பாடளித்துள்ளனர்.
மாணவிகளை நேரில் சந்திக்கும்படியும் அழைத்துள்ளார். தனது பெற்றோருடன் மாணவியொருவர் நேரில் சென்றதையடுத்து, அவர் கைதானார்.
அவர் திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளன. மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்கிறார்.
இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.