ஜோக்கர் இயக்குனரின் புதிய ஆல்பம் பாடல் வெளியீடு..

Date:

இயக்குனர் ராஜூ முருகனின் ‘கொஞ்சம் பேசு’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபகாலமாக ஆல்பம் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அதிலும் தமிழ் சினிமாவில் ஒன்றன்பின் ஒன்றாக ஆல்பம் பாடல் வெளியாகி வருகிறது. ஏற்கனவே தீ மற்றும் அறிவு இணைந்து உருவாக்கிய எஞ்ஜாய் என்ஜாமி பாடல் உலக அளவில் பிரபலமானது. இந்த பாடல் பல உலக சாதனைகளை படைத்து, யூடியூப்பில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் கவர்ந்து வருகிறது. இதேபோன்று குட்டி பட்டாஸ் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த வரிசையில் தற்போது ராஜூ முருகன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் ‘கொஞ்சம் பேசு’. குக்கூ, ஜோக்கர், ஜிப்சி உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர் இந்த ராஜூ முருகன். இவரிடம் உதவியாளராக இருந்த சஞ்சய் இந்த பாடலை இயக்கியுள்ளார். ‘சூது கவ்வும்‘ மூலம் புகழ்பெற்ற சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ள இந்த பாடலை பிரதீப் குமார், நித்ஸ்ரீ பாடியுள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமானிடம் உதவியாளராக இருந்த நரேன், இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். யுகபாரதியின் வரிகளில், சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பாணியாற்றியுள்ளார். தம்பதியினர் இடையே ஏற்படும் சிறுவிரிசல்கள் பெரிதாகாமல் இருப்பது எப்படி என்பதை இந்த ஆல்பம் பாடல் மூலம் விளக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆல்பம் பாடலை நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜி.வி,பிரகாஷ்குமார் ஆகியோர் இணைந்து இன்று வெளியிட்டுள்ளனர். இந்த ஆல்பம் பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்