அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு தளர்வுகளை இங்கிலாந்து அரசு தள்ளிவைத்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுதிலும் உள்ள பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35,707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 50.58 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனா வைரசால் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,28,365 ஆக உள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து 43.52 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 5.77 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1