காதலுக்கு கண் இல்லை என கேள்விபட்டிரிப்போம். ஆனால் காதலிப்பவர்களை கண்ணால்பார்க்காமலேயே காதல் வந்த கதை தெரியுமா?
கெல்லி ஜேக்கப்ஸ் என்ற நெதர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் சிறையில் உள்ள கைதிகளின் மன நிலையை ஆய்வு செய்து எழுதும் ஒரு வெப்சைட்டில் பயிற்சி பணியாளராக வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு அமெரிக்காவின் ஓர்கான் சிறையில் உள்ள சில கைதிகளின் லிஸ்டை கொடுத்து அவர்களிடம் ஒன்லைன், லெட்டர், வீடியோ கால்கள் மூலம் பேசி அவர்களது மன நிலையை பற்றி எழுதும் பணி கொடுக்கப்பட்டது. அதன் படி அவர் தனக்கு கொடுக்கப்பட்ட ஜேம்ஸ் டேனியல் என்ற கைதியை தொடர்பு கொண்டு தனது வேலை தொடர்பாக அவரிடம் பேச விருப்புவதாக தெரிவித்து பேசினார். ஜேம்ஸ் கடந்த 2012ம் ஆண்டு பொது இடத்தில் நெருப்பு துப்பாக்கிய பயன்படுத்தியதற்காக வும் அதன் மூலம் 4 பேரை கொலை செய்ததற்காகவும் 20 ஆண்டு சிறை தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். தற்போது வரை 9 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டார். இன்னும் 11 ஆண்டுகள் அவர் சிறையில் கழிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இந்நிலையில் ஜேம்ஸ்வும் கேல்லியும் பேச துவங்கினர். ஜேம்ஸ் தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை எல்லாம் கேல்லியிடம் சொல்ல துவங்கினார். இருவரும் தினமும் இது குறித்து பல மணி நேரம் ஒன்லைன் மூலம் பேசினர். கேல்லிக்கு ஜேம்ஸ் மீதும், ஜேம்ஸிற்கு கேல்லி மீதும் காதல் வந்துவிட்டது.
இதையடுத்து ஜேம்ஸ் கெல்லிக்கு ஒருமுறை வீடியோ கால் பேசும் போது தன் காதலை சொல்லிவிட்டார். அப்பொழுது சிறையில் செய்த ஒரு மோதிரத்தை காண்பித்து தன்னை திருமணம் செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். அதை கேட்டதும் கேல்லியும் ஒப்புக்கொண்டார். இருவரும் பரஸ்பரம் காதலை பரிமாறிக்கொண்டனர்.
இந்த விவகாரம் கேல்லியின் பெற்றோருக்கு தெரிந்த போது முதலில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர் அவர்கள் ஜேம்ஸ் உடன் போனில் பேசிய பின்பு திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் இருவரும் வரும் ஒக்டோபர் மாதம் சிறையிலேயே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஜேம்ஸ் திருமணம் முடிந்தாலும் தன் மனைவியுடன் வாழ அனுமதி கிடையாது அவர் 2032ம் ஆண்டு தான் விடுதலை செய்யப்படுவார். அதுவரை இருவரும் பிரிந்து தான் வாழ வேண்டும். ஆனால் ஜேம்ஸை அவ்வப்போது நேரில் வந்து சந்தித்துக்கொள்ள அவருக்கு அனுமதி கிடைக்கும். தற்போது சிறை கைதியும் கமிட் ஆகி கல்யாணம் செய்யப்போகிற சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.