93 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவில் நடந்த போட்டியில் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பட்டத்தை வென்றுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பள்ளி மாணவர்களுக்காக “ஸ்பெல்லிங் பீ” என்னும் ஆங்கில வார்த்தைகளை தவறின்றி உச்சரிக்கும் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக ஜனாதிபதியின் மனைவி கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் 93 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக இந்த “ஸ்பெல்லிங் பீ” போட்டியில் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சைலா அவந்த் கார்டே என்னும் 14 வயது சிறுமி வெற்றிக் கோப்பையை வென்றுள்ளார். அதோடு மட்டுமின்றி சுமார் 50,000 அமெரிக்க டாலர்களையும் பரிசுத் தொகையாக பெற்றுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1