29.3 C
Jaffna
April 13, 2025
Pagetamil
உலகம்

டேட்டிங் செய்ய ஆண்களை தேடும் 85 வயது பாட்டி!

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் ஹேட்டை ரெட்டோரேஜ், 85 வயதாகும் இவர் சமீபத்தில் தனது பாய் பிரண்ட் உடன் பிரேக்-அப் செய்து விட்டு அடுத்த பாய் பிரெண்டை தேடி வருகிறார். அட ஆமாங்க…

ஹேட்டை திருமணமாகி தனது கணவரை 48 வது வயதில் விவாகரத்து செய்து விட்டார். தன் இளமை காலத்தில் பார் டான்ஸராக இருந்த இவர் பின்னர் லைஃப் கோச் மற்றும் எழுத்தாளர் பணியை செய்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. அவர்களுக்கு திருமணமாகியும் குழந்தைகள் உள்ளனர்.

85 வயது பாட்டி இளம் வயதினருடன் டேட்டிங்கா !

இந்நிலையில் இவர் அமெரிக்காவில் ஏஜ் கேப் என்ற ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இவரும் ஜான் என்பவரும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர். ஜான்னும் இவரும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்து கொண்டிருந்தனர். ஜானிற்கு 39 வயதாகிறது. அவர் 85 வயதாகும் இந்த பாட்டியை டேட்டிங் செய்து வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் பிரேக்-அப் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இவர் பல்வேறு டேட்டிங் ஆப்கள் மூலம் தனக்கான அடுத்த காதலரை தேடி சென்றுள்ளார். பிரபலமான டின்டர் ஆப்பில் இவர் வாரம் மூன்று நாட்கள் டேட்டிங் எல்லாம் சென்றுள்ளார். இந்நிலையில் அந்த ஆப் இவரை தடை செய்து விட்டது. இந்நிலையில் இவர் சமீபத்தில் பேப்பர் ஒன்றில் விளம்பரம் செய்திருந்தார். அதில் தனக்கு 35 வயதிற்கும் குறைவான ஆண் டேட்டிங் செய்ய தேவை என குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து அவர் கூறும் போது : “தற்போது நான் யாரையும் டேட் செய்யவில்லை. எல்லாம் பிரேக்- அப் ஆகிவிட்டது. டேட் செய்வதற்கான ஆளை தேடிக்கொண்டிருக்கிறேன். 35 வயதாகிற்கு கீழ் உள்ள நபர்களை தான் டேட் செய்ய விரும்புகிறேன். அவர்களால் தான் என்னை கட்டிலில் சந்தோஷப்படுத்த முடியும். எத்தனை நாட்கள் தான் வயதான ஆண்கள் இளம் பெண்களை டேட் செய்வது நடக்கும்? நான் அதை உடைத்து வயதான என்னை ஆண்கள் டேட் செய்ய விரும்புகிறார்கள். உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். எனக்கு என் வயது பற்றி எல்லாம் கவலையில்லை மனதளவில் இளமையாக தான் இருக்கிறேன். நான் சந்தோஷமாக இருப்பது தான் எனது ஆரோக்கியத்தின் சிக்ரெட்”என கூறுகிறார்

தனது செக்ஸ் வாழ்க்கை குறித்து டேட்டிங் வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசும் இவர் உடலை பராமரிப்பதில் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார். இத்தனை வயதிலும் துறுதுறுவென இருக்கிறார். தினமும் தவறாமல் உடல் பயிற்சி, நீச்சல் பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராம் தளத்தில் கவர்ச்சியான ஆடை அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் பல வைரலாக பரவி வருகின்றன.தற்போது இவர் தனக்கான டேட்டிங் செய்ய ஆண்களை தேடி வரும் இந்த செய்திவைரலாக பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்

ஈரான்-அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் அப்பாஸ் அரக்சி யார்?

Pagetamil

உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளின் உரிமையை ரஷ்யாவிற்கு விட்டுக்கொடுப்பதே போர் நிறுத்தத்திற்கு சிறந்த வழி!

Pagetamil

வரிப் போர்: ஹாலிவுட் படங்களை குறி வைக்கும் சீனா!

Pagetamil

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!