இலங்கை வீரர் சந்துன் வீரக்கொடிக்கு கொரோனா தொற்று!

Date:

இலங்கை கிரிக்கெட் வீரர் சந்துன் வீரக்கொடி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

வரவிருக்கும் இந்தியா தொடருக்காக தனித்தனியாக பயிற்சி பெற்ற குழாமொன்றில் அவர் அங்கம் வகித்திருந்தார்.

கொழும்பு சினமன் கார்டன் கிராண்ட் ஹோட்டலில் தங்கியிருந்து பயிற்சி பெற்ற 15 மூத்த கிரிக்கெட் வீரர்களுள் சந்துன் வீரக்கொடியும் ஒருவர்.

இந்தியா தொடருக்கு முன்னதாக பயிற்சி போட்டிகளில் விளையாடுவதற்காக சந்துன் வீரக்கொடி மற்றும் பானுக ராஜபக்ஷ, அஞ்சலோ பெரேரா, அசேல குணரத்த உள்ளிட்ட குழாம் நேற்று இரவு தம்புள்ளவிற்கு அனுப்பப்பட்டது.

சினமன் கார்டன் கிராண்ட் ஹோட்டலில் தங்கியிருந்து பயிற்சி பெற்ற 15 வீரர்களும் இப்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தம்புள்ளவில் தனி உயிர்ப்பாதுகாப்பு குமிழ் திட்டத்தில் இன்னொரு குழாம் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் யாரும் தொற்றிற்குள்ளாகவில்லை.

அண்மையில் இங்கிலாந்து சென்ற இலங்கை தேசிய அணியில் அங்கம் வகித்த இரண்டு பயிற்சி ஊழியர்கள் தொற்றிற்குள்ளானதையடுத்து வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, இந்திய தொடரில் ஆடுவதற்காக புதிய அணியொன்றை இலங்கை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...

உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பிரதேச சபையின் முயற்சி

நிந்தவூர் – 09 பகுதியில் அமைந்துள்ள வவ்வாளோடை களப்பை நீர்வாழ் உயிரின...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்