25.4 C
Jaffna
March 12, 2025
Pagetamil
இலங்கை

சர்வதேசத்தின் முன் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் நேற்றைய சம்பவம் இல்லாமலாக்கி விட்டது: ரணில்!

தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு யாரையும் வலுக்கட்டாயமாக அனுப்புவது சட்டத்திற்கு எதிரானது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் பேசிய ரணில்,  தற்போதுள்ள சட்டங்கள் தனிநபர்களை காரணமின்றி தனிமைப்படுத்த அனுமதிக்காது என்பதை சுட்டிக்காட்டினார்.

தொழிற்சங்கத் தலைவர் ஜோஷெப் ஸ்டாலின் ஒரு முக்கிய நபர் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழற்சங்கம் என்றும், இந்த சம்பவம் சர்வதேச தொழிலாளர் அமைப்பு முன் எழுப்பப்படும் என்றும் கூறினார்.

இது தொடர்பாக எந்த சட்டமும் இல்லை என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், காவல்துறையின் நடவடிக்கைகளை விசாரிக்க ஒரு குழுவை நியமிக்கவும் நிதி அமைச்சரிடம் அழைப்பு விடுத்தார்.

சர்வதேச சமூகத்தின் முன் உள்ள அனைத்து சாதகமான அம்சங்களும் நேற்றைய சம்பவங்கள் மூலம் கழுவப்படும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கான உரிமை ஒரு அடிப்படை உரிமை என்று அவர் குறிப்பிட்டார், முல்லைத்தீவு அல்லது வேறு எந்த இடத்திலும் தனிமைப்படுத்தப்படுவதற்கு ஒருவரை கொண்டு செல்ல தனிமைப்படுத்தல் சட்டத்தில் எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை என்று கூறினார்.

விதிமுறைகள் வகுக்கப்படும்போது, ​​அது அடிப்படை உரிமைகளுக்கு ஏற்ப செயற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் தமிழ் அரசு கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி யாழில் கையெழுத்து

Pagetamil

இலங்கை வந்ததும் அர்ச்சுனாவை பற்றி படித்த கீர்த்தி சுரேஷ்

Pagetamil

பணிப்பாளர் அசமந்தமா?: யாழ் போதனாவில் மீண்டும் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

ரெலோவிலிருந்து விலக்கப்பட்ட விந்தன் தமிழரசு கட்சியில் இணைவு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!