இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக 25 பேரை கொண்ட உத்தேச அணி பெயரிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தொடருக்கான புதிய கப்டனாக சகலதுறை வீரர் தசுன் ஷானகவும் துணைக் கப்டனாக தனஞ்ஜய டி சில்வாவும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
இந்த நியமனம் விளையாட்டு அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
உத்தேச அணி விபரம்- தசுன் ஷானக (கப்டன்), தனஞ்சய டி சில்வா (துணை கப்டன்), குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, பத்தும் நிசங்க, சரித் அசலங்க, வணிந்து ஹசரங்க, ரமேஷ் மெண்டிஸ், சமிக கருணாரத்ன, தனஞ்ஜன லக்சன், இஷான் ஜெயரத்ன, துஷ்மந்த சமீர, இசுரு உதன, அசித பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ, ஷிரான் பெர்னாண்டோ, லக்ஷன் சந்தகன், அகில தனஞ்சய, பிரவீன் ஜெயவிக்ரம, ஆஷென் பண்டார, லஹிரு உதர, மினோட் பானுக, லஹிரு குமார, கசுன் ராஜித, பானுக ராஜபக்ஷ.