25.5 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

வீட்டுக்காவல் கோரும் ரிஷாத்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவின் விசாரணை முடியும் வரை அவரது வீட்டில் தடுத்து வைக்க  இடைக்கால  உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதி வழக்கறிஞர் பைஸல் முஸ்தபா உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு கைதியை வீட்டுக் காவலில் வைப்பதற்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 11 வது பிரிவின் கீழ் பாதுகாப்பு அமைச்சருக்கு அதிகாரம் இருப்பதால், அத்தகைய உத்தரவை தனது வாடிக்கையாளருக்கு வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி பைஸல் முஸ்தபா நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

இந்த மனுக்கள் விஜித் மலல்கொட, காமினி அமரசேகர மற்றும் முர்து பெர்னாண்டோ அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் ரிஷாத் பதியுதீனுக்காக ஆஜரான பைசல் முஸ்தபா, தனது வாடிக்கையாளர் தற்போது சிஐடி காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கோவிட் நோயால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடுதியில் வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

east tamil

இலங்கைக்கு இந்திய அரசின் நிதி ஒதுக்கீடு

east tamil

போதைப்பொருளை பிடிக்க புதிய தொலைபேசி இலக்கம்

east tamil

கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

east tamil

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி

east tamil

Leave a Comment