Pagetamil
உலகம்

உலகின் மிகச்சிறிய பசு: கொரோனா கட்டுப்பாட்டையும் மீறி படையெடுக்கும் மக்கள்!

பங்களாதேஷில் 51 செ.மீ. உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் ஊரடங்கை பொருட்படுத்தாமல் காண வருகின்றனர்.

தலைநகர் டாக்காவுக்கு அருகே 30 கிலோமீட்டர் தொலைவில் சாரிகிராமில் உள்ள ஷிகோர் என்பவரின் பண்ணையில் ஒரு பசு உள்ளது. அதனை பார்க்க சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் திரண்டு வருகின்றனர்.

ராணி என பெயரிடப்பட்டு உள்ள அந்த பசு 51 சென்டிமீட்டர்நீளம் மற்றும் 26 கிலோகிராம் மட்டுமே எடையுள்ளது. இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என கூறப்படுகிறது.

கின்னஸ் உலக சாதனைகளில் மிகச்சிறிய பசுவை விட இது 10 சென்டிமீட்டர் குறைவு என்று அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த மாணிக்யம் என்ற பசுவை உலகின் குள்ளமான பசு என, கின்னஸ் உலக சாதனை அமைப்பு கடந்த 2014இல் அங்கீகரித்தது. இதன் உயரம் 61 செ.மீ என்பது குறிப்பிடத்தக்கது.

ராணி பசுவின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பல்வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இந்தப் பசுவை காண ஆயிரக்கணக்கானோர் அந்த பண்ணைக்கு படையெடுத்து வருகின்றனர். அந்தப் பசுவுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையடுத்து, பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என, பண்ணை உரிமையாளரிடம் சுகாதாராத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் காரணமாக நாடு தழுவிய போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் டாக்காவிலிருந்து தென்மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாரிகிராமில் உள்ள பண்ணைக்கு மக்கள் ரிக்‌ஷாக்களில் திரண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் திட்டங்களை கசிய விட்ட சிஐஏ ஊழியர் கைது!

Pagetamil

இம்ரான் கானுக்கு 14 வருட சிறைத்தண்டனை

Pagetamil

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெய்லர் பிரிட்ஸின் நிதியுதவி

east tamil

உரிமையாளருக்காக 2 மாதங்கள் காத்திருக்கும் நாய்

Pagetamil

கைதிகள் துணையுடன் உறவு கொள்ள சிறைச்சாலைகளுக்குள் ‘காதல் அறைகள்’: இத்தாலி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏற்படும் மாற்றம்!

Pagetamil

Leave a Comment