சரக்கு பெட்டகங்களுடன் கப்பல் ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அந்த கப்பலில் பயங்கரமான வெடிசத்தம் கேட்டது.
ஐக்கிய அரபு நாடான துபாயில் மிகப்பெரிய வர்த்தக துறைமுகம் செயல்பட்டு வருகிறது.அங்கு சரக்கு பெட்டகங்களுடன் கப்பல் ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அந்த கப்பலில் பயங்கரமான வெடிசத்தம் கேட்டது. இதில் கப்பல் தீப்பிடித்து கொண்டது.
கப்பலின் ஒரு பகுதி வெடித்து சிதறியது. மற்ற பகுதிகள் முழுவதும் தொடர்ந்து தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு படையினர் அதை கட்டுப்படுத்துவதற்கு போராடி வருகிறார்கள். என்ன காரணத்தால் வெடிவிபத்து ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
கன்டெய்னரில் இருந்த வெடிக்கும் சக்தி கொண்ட பொருட்களால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒருவேளை நாசவேலை காரணமாகவும் சம்பவம் நடந்து இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் சந்தேகிக்கிறார்கள்.
இது சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வெடிவிபத்தின் சத்தம் 25 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டது. கப்பல் தீப்பிடித்ததால் அந்த பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.