கோவையில் இளைஞர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து போதை ஊசி செலுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவையில் கடந்த சில மாதங்களாக கஞ்சா, குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கோவையில் இளைஞர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து போதை ஊசி செலுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1