கே.ஜி.எப். 2 படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல்!

Date:

பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி உள்ள ‘கே.ஜி.எப். 2’ படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கே.ஜி.எப்’. இப்படம் பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. தற்போது இந்த படத்தின் 2வது பாகம் உருவாகி வருகிறது. இதில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தை முதலில் ஜுலை 16  வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கொரோனா 2-வது அலை காரணமாக படத்தின் பணிகள் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் திகதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முதல் பாகம் வெளியானதைப் போலவே கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் இப்படத்தை வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்குள் இயல்புநிலை திரும்பி, திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி கிடைத்துவிடும் என்பதால், கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் வெளியிடுவது படத்திற்கு பிளஸ் ஆக அமையும் என படக்குழு கருதுகிறதாம்.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலே கழிப்பறைக்கு செல்வதென்றாலும் கோட்டாவிடம் கேட்பார்!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹாரன் ஹாஷிம் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு மேஜர்...

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....

கனடாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதான தமிழன்!

கனடா, டர்ஹாம் பிராந்தியத்தின் விட்பியில், குழந்தைகளை ஆசை காட்டி அழைத்தல் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்