தப்பு பண்ணிட்டேன்… சிம்பு, யுவன் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் கூட்டணியின் புதிய ஆல்பம் பாடல்!

Date:

நடிகர் சிம்பு பாடியுள்ள புதிய ஆல்பம் பாடலின் டீசர் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது U1 Records நிறுவனம் சார்பில் ‘தப்பு பண்ணிட்டேன்’ என்ற ஆல்பம் பாடலைத் தயாரித்துள்ளார். இந்தப் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு ஏகே பிரியன் என்பவர் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலில் காளிதாஸ் மற்றும் மேகா ஆகாஷ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது தப்பு பண்ணிட்டேன் என்ற இந்த பாடலின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. டீசரில் சிம்பு குரலுடன் ஆரம்பிக்கிறது. சண்டை போட்டு பிறந்த காதலர்களைப் பற்றிய பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காளிதாஸ் மற்றும் மேகா ஆகாஷ் இருவரும் ஏற்கனவே ‘புத்தம் புது காலை’ அந்தாலஜியில் சேர்ந்து நடித்துள்ளனர். இந்நிலையில் தப்பு பண்ணிட்டேன் ஆல்பம் பாடலுக்காக மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர்.

இதற்கிடையில் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். மாநாடு படத்திலும் யுவன் இசையில் சிம்பு ஒரு பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்