உலகம்

மீண்டும் ஒரு ஏமாற்றம்… பிரித்தானிய இளவரசர்கள் வில்லியம் ஹரி இணையும் வாய்ப்பு சந்தேகமே!

பிரிட்டன் இளவரசி டயானாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக இளவரசர் ஹரி பிரிட்டனுக்கு சென்ற போது குடும்பத்தினருடன் சமரசம் ஆவதற்கான சரியான வாய்ப்புகள் அமையவில்லை .

பிரிட்டன் இளவரசி டயானாவின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் வகையில் கென்சிங்டன் மாளிகையில் அவருடைய உருவச்சிலை திறப்பு நிகழ்ச்சி நடந்தது . இதில் இளவரசியின் உருவ சிலையை அவருடைய இரு மகன்களான இளவரசர்கள் வில்லியம்,ஹரி இணைந்து திறந்து வைத்தனர். இந்த சிலை திறப்பு நிகழ்ச்சி கொரோனா தொற்று காரணமாக எளிமையாக நடத்தி முடிக்கப்பட்டது.

ஆனால் இந்த நிகழ்ச்சியின்போது இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை.இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் இளவரசி டயானாவை கௌரவப்படுத்தும் வகையில் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக அரச குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் செப்டம்பர் மாதத்தில் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சி சகோதரர்களுக்கிடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடப்பதற்கு உதவியாக இருக்கும் என்று அரண்மனை வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார் .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கனடாவில் இறுதிச்சடங்கு செலவு எகிறல்: உரிமைகோரப்படாத சடலங்கள் அதிகரிக்கிறது!

Pagetamil

தைவான் பாராளுமன்றத்துக்குள் களேபரம்!

Pagetamil

‘1000 இற்கும் அதிக ஹமாஸ் போராளிகள் எங்கள் நாட்டில் சிகிச்சை பெறுகிறார்கள்’: துருக்கி ஜனாதிபதி

Pagetamil

லைசன்ஸ் கேட்ட பொலிஸ்காரருக்கு சட்டையை இறக்கி காண்பித்த இளம்பெண்!

Pagetamil

‘உக்ரைனுக்காக போரிட மேற்குலகம் விரும்பினால் நாங்களும் ரெடி’: ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

Pagetamil

Leave a Comment