27.5 C
Jaffna
February 5, 2025
Pagetamil
குற்றம்

யாழில் பதுங்கியிருந்த முல்லைத்தீவு ரௌடிகள் மடக்கிப் பிடிப்பு!

முல்லைத்தீவில் வாள் வெட்டு மற்றும் வாகனத்துக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேக நபர்களை யாழ்ப்பாண பொலிஸார் நவாலியில் வைத்து இன்று (06) கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு வடக்கு பகுதியில் கடந்த 27ஆம் திகதி இரவு வீடு புகுந்த சுமார் 7 பேர்கொண்ட கும்பல் வாள் வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதன்போது வீட்டில் இருந்த நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளதுடன் வாகனம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்து.

இந்த நிலையில் சி.சி.ரிவி கமரா மூலம் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை வைத்து சந்தேக நபர்களை இனம் காணும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிசார் ஈடுபட்டு வந்தனர்.

சந்தேக நபர்களை கைதுசெய்ய அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்பட்டவர்களாக பிரதான சந்தேக நபர்களாக சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களை இன்று (6) நாவலியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த யாழ்பாண பொலிஸார் சந்தேக நபர்களை முல்லைத்தீவு பொலிஸாரிடம் கையளிக்க உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

இதையும் படியுங்கள்

குடும்பத் தகராறின் காரணமாக மனைவி கொடூர கொலை!

east tamil

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

east tamil

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

Leave a Comment