25.5 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

யாழில் இதுவரை 103 கொரோனா மரணங்கள்!

சாவற்காடு கிராம அலுவலர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுமென எதிர்பார்ப்பதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அரச அதிபர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா நிலைமையை அவதானிக்கும்போது நேற்றைய தினம் மாத்திரம் 64 கொரோனா தொற்றாளர்கள் யாழில் கண்டறியப்பட்டுள்ளனர். 5238 குடும்பங்களைச் சேர்ந்த 15703 நபர்கள் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர்.

யாழில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5626 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் 103 ஆக கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட தம்பாட்டி கிராமம், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாவற்காடு கிராம அலுவலர் பிரிவும் , காரைநகர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள், கரவெட்டியில் ஒரு கிராமும், குருநகரில் இரண்டு கிராம அலுவலகர் பிரிவும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாவற்காடு கிராம அலுவலர் பிரிவு விடுவிக்கப்படுமென எதிர்பார்க்கிறோம்.

தற்பொழுது பயணத் தடை மாகாணங்களுக்கு இடையிலே காணப்படுவதால் சகல அனுமதிக்கப்பட்ட விடயங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறுகின்றது. பொதுமக்களுடைய வாழ்வாதார நடவடிக்கைகளான விவசாயம் மீன்பிடி ஏனைய இதர நடவடிக்கைகள் சுகாதார வழிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த காலகட்டத்தை மிக கவனமான பாதுகாப்பான சூழலை கருத்தில் கொண்டு நடந்து கொள்ள வேண்டும். அதேவேளை தேவையற்ற ஒன்றுகூடல்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படி நாங்கள் மீண்டும் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றோம்.

தடுப்பூசி நடவடிக்கைகள் இரண்டாம் கட்டமாக முதல் தரம் வழங்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. முதலாவதாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. தடுப்பூசி வழங்கும் செயற்பாடு தொடர்ச்சியாக நடைபெறும்.மக்கள் எமது அறிவுறுத்தலுக்கு உட்பட்டு நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். மேலும் முன்களப் பணியாளர்களுக்கும் தொடர்ந்து தடுப்பூசிகள் இந்த வாரத்துக்குள் செலுத்தப்படவுள்ளது. எல்லா முன்களப் பணியாளர்களும் தடுப்பூசி போடும் செயற்பாட்டுக்கு உள்வாங்கப்படுவார்கள் .அதே நேரத்தில் அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு அடுத்த கட்டத்தில் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் .

மேலும் இந்த இரண்டாம் கட்டத்துக்கான முதலாவது தடுப்பூசி முடிவடைந்ததும் மேலும் ஒரு தொகுதி தடுப்பூசி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

ஆகவே இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்பவர்கள் தங்களுடைய பிரதேச செயலகப்பிரிவில் இருக்கின்ற நிலையங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம். அங்கு தேவையற்ற நெரிசலைத் தவிர்த்து இருக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கட்டைக்காடு குப்பை மேடாக மாறியதால் மக்கள் அவதி

east tamil

யாழ் பல்கலைக்குள் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்… இரவில் தொங்கும் பெண்களின் உள்ளாடைகள்- கலைப்பீடாதிபதி பதவிவிலகலுக்கு இதுதான் காரணமா?

Pagetamil

முகமாலையில் ரயில் மோதி இரண்டு மாடுகள் உயிரிழப்பு

east tamil

கோட்டை – காங்கேசன்துறை இடையே இரவு ரயில் சேவை அறிமுகம்

east tamil

ஒரே நாளில் 33 தமிழக மீனவர்கள் கைது

east tamil

Leave a Comment