கொலம்பியாவில் இராணுவத்தின் பிரமாண்ட கட்டிடம் இடிப்பு!

Date:

கொலம்பியாவில் அந்நாட்டு இராணுவத்துக்கு சொந்தமான கட்டடம், வெடிப் பொருட்கள் வைத்து தகர்க்கப்பட்டது.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் பொகோட்டா நகரில் அந்நாட்டு இராணுவத்துக்கு சொந்தமான பிரமாண்ட கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கடந்த 59 ஆண்டுகளாக பாதுகாப்புத் துறை தலைமையகமாக விளங்கியது. மிகவும் பழைமை வாய்ந்த அந்த கட்டிடம் ஸ்திரத்தன்மையற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அதனை இடித்துவிட்டு இராணுவத்திற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பிரமாண்டமான அந்த கட்டிடம் பலத்த பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. கட்டிடத்தின் அனைத்து பகுதிகளிலும் சக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டு ஒரே சமயத்தில் வெடிக்க வைக்கப்பட்டது. இதனால் நொடிப் பொழுதில் அந்த கட்டடம் இடிந்து தரை மட்டமாகி புழுதி கிளம்பியது. இதனால், அந்த பகுதி முழுவதும் புழுதி மண்டலமாக காட்சியளித்தது.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் – வனஜீவிகள் அலுவலகம் அமைக்கவும் திட்டம்

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில்...

சாய்ந்தமருதில் தீக்காயங்களுக்கு உள்ளாகிப் பெண் பலி: சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளாகிச் சிகிச்சை...

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்