இந்த புகைப்படங்கள் நேற்று (5) கிளிநொச்சி நகரில்-ஏ9 வீதியில்- எடுக்கப்பட்டவை.
அதாவது, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்த்தனவினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல் குறிப்புக்கள் அமுலாகிய தினமான நேற்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
கடந்த 3ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற விபத்தில் சந்திரசேனன் கிரிதரன் (25) என்ற இளைஞன் உயிரிழந்தார். அவர் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்.
அவரது இறுதி ஊர்வலத்தில் நேற்று சுகாதார விதிமுறைகளை மீறி பெருமளவான ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர். எனினும், சுகாதாரத்துறையினர் அதை கண்டுகொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
ஏற்கனவே, கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலைகளின் மூலம் கொரோனா பரவல் ஏற்பட்டு, ஒரு கிராமத்தையே முடக்க வேண்டிய நிலைமையேற்பட்டது. எனினும், சுகாதாரத்துறையினர் ஆடைததொழிற்சாலைகளை மூட மறுப்பதாக அப்போது சர்ச்சை தோன்றியது குறிப்பிடத்தக்கது.
