மன்னாரில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்!

Date:

மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை பிரிவுகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை(5) காலை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கிராம அலுவலகர் பிரிவுகள் ஊடாக ஒதுக்கப்பட்ட நேரங்களுக்கு அமைய செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது.

இதன் போது உரிய திணைக்கள அதிகாரிகள் தடுப்பூசி செலுத்தும் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

நாளை செவ்வாய்க்கிழமை(6) காலை 8 மணி முதல் 2 ஆவது தடவையாக தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சவுதி விமான நிலைய தாக்குதல்களில் 3 பேர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்கா ஆகிய இடங்களில் உள்ள விமான...

பழைய பேருந்து பாதி வழியிலேயே நின்றது: பாடசாலை மாணவர்கள் நிர்க்கதி!

சேந்தாங்குளத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற இ.போ.ச பேருந்து பழுதடைந்ததால், யாழ்...

விபத்தில் பாடசாலை மாணவன் பலி

நேற்று (7) நோர்டன் பிரிட்ஜ் - ஹட்டன் பிரதான வீதியில் உள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்