28.3 C
Jaffna
December 12, 2024
Pagetamil
கிழக்கு

உயிருடன் இல்லாத சாராவை எனது கணவர் எப்படி தப்ப வைத்திருக்க முடியும்?

உயிர்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்ட சாரா என்ற புலஸ்தினி ராஜேந்திரன் உயிருடன் இல்லையென ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே, சாராவை இந்தியாவுக்கு தப்பி ஓட உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தனது கணவரான தேவகுமாரை விடுவிக்குமாறு அவரது மனைவியான டிலோஜினி கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாங்காடு பகுதியிலுள்ள அவரது வீட்டில நேற்று (04) ஊடகவியலாளர்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது கணவரான தேவகுமார் என்பவரை சாரா என்ற புலஸ்தினியை இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகத்தில் சிஐடியினர் கடந்த வருடம் 7 மாதம் 11 ம் திகதி வீட்டில் வைத்து கைது செய்தனர்.

அவர் மீது சாட்டப்பட்ட குற்றம் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. கொழும்பில் இருந்து கல்முனை நீதிமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 8 ம் திகதி கொண்டு வந்து மட்டக்களப்பு சிறையில் அடைத்து வைத்துள்ளதுடன் சட்டமா அதிபரிடம் இருந்து ஆவணம் வந்ததும் விடுவதாக தெரிவித்தனர்.

ஆனால் அது தொடர்பாக இதுவரையும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனக்கு 4 பிள்ளைகள் கல்வி கற்று வருகின்றனர். நாங்கள் வாழ்வாதரம் எதுவும் இன்றி வறுமையில் இருக்கின்றோம். நான் மிளகாய் தோட்டத்தில் புல்லு பிடுங்க கூலி தொழிலுக்கு சென்று அதில் வரும் சம்பளத்தில் வறுமையிலும் கஷ்டத்திலும் வாழ்ந்து வருகின்றேன்.

அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், சாரா என்பவர் உயிருடன் இல்லையென ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும் போது எனது கணவர் செல்வராசா தேவகுமார் சாராவை இந்தியாவுக்கு தப்பி ஓட உதவி செய்தது என்பது எப்படி சாத்தியமாகும்.

சாரா உயிருடன் இல்லை என்றால் தப்பிக்க எப்படி உதவி செய்திருக்க முடியும். எனவே எனது கணவர் நிரபராதி. எனவே, எனது பிள்ளைகளின் எதிர்காலம் அவர்களது கல்வி போன்றவற்றில் கவனம் செலுத்தி அவரை விடுவித்து தருமாறு அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலையில் இடம் பெற்ற கிழக்கு மாகாண இலக்கிய விழா

east pagetamil

அம்பாறையில் போராட்டம்

Pagetamil

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக திரு.குமாரசிங்கம் குணநாதன் நியமிப்பு

east pagetamil

உரிமை கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

east pagetamil

மலேசிய தூதுவருடன் கிழக்கு மாகாண ஆளுனரின் சந்திப்பு

east pagetamil

Leave a Comment