புதுப்பெண்ணை மரத்தின் கிளையில் கட்டி அந்தரத்தில் தொங்கவிட்டு அடித்த குடும்பத்தினரின் கொடூர வீடியோ வெளியாகி பதற வைத்திருக்கும் நிலையில் ஆற்றில் குளிக்கப்போன பெண்களை அரை நிர்வாணத்துடன் அடித்து துவைத்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய பிரதேசத்தில் அலிராஜ்பூர், தார் மாவட்டங்களின் பழங்குடியினர் கிராமங்களில்தான் இந்த இரண்டு காட்டு மிராண்டித் தனங்களும் அரங்கேறியிருக்கிறது.
தார் மாவட்டத்தில் உள்ள பழங்குடி சமூகத்தினர் வசிக்கும் பிபால்வா கிராமத்தில் சகோரிகள் இருவரும் ஆற்றுக்கு குளிக்கச் சென்றிருக்கிறார்கள். குளிக்கச்சென்றபோது கரையில் அமர்ந்து தாய் மாமன்களுடன் செல்போனில் பேசியிருக்கிறார்கள். இந்த தகவல் அந்த பெண்களின் சகோதரர்களுக்கு தெரியவந்திருக்கிறது. இதையடுத்து அவர்கள் ஆற்றங்கரைக்கு ஓடி வந்துள்ளனர். உறவினர்களும் அவர்களுடன் ஓடி வந்துள்ளனர். மேலாடையை அவிழ்த்துவிட்டு குளிப்பதற்காக சகோதரிகள் ஆற்றுக்குள் இறங்கியபோது ஓடிவந்த சகோதரர்கள் அவர்களின் தலைமுடியை பிடித்து இழுத்துக்கொண்டு கரைக்கு வந்தனர்.
கடந்த 25ஆம் திகதி நடந்த இந்த சம்பவ வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதற வைத்தது.
அண்மையில் இதே மத்திய பிரதேசத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தில், திருமணமான மூன்று மாதத்தில் கணவனுடன் ஏற்பட்ட மனகசப்பினால் புகுந்த வீட்டை விட்டு வெளியேறி பிறந்த வீட்டிற்கு வர அஞ்சி, உறவினர் வீட்டில் தங்கியிருந்த புதுப்பெண்ணை மரத்தில் கட்டி அந்தரத்தில் தொங்கவிட்டு சகோதரர்களும், தந்தையும் அடித்த கொடூர சம்பவம் நிகழ்ந்து,அந்த சம்பவ வீடியோ வெளியாகி பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் போலீசார் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு காட்டுமிராண்டித்தனம் ம.பி.யில் ஏற்பட்டதை பலரும் கண்டித்து குரல் கொடுத்து வந்த நிலையில், தண்டா போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து இளம்பெண்களை அடித்த சம்பவத்தில் தாய் உள்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Such barbaric & inhuman act upon women can't be tolerated. We condemn such atrocity & heinous crime.
Thank you @CMMadhyaPradesh for arresting the culprits and taking immediate action.@VanathiBJP @JPNadda @dushyanttgautam pic.twitter.com/L2QcIXZkvF
— BJP Mahila Morcha (@BJPMahilaMorcha) July 4, 2021
Tanda police station incharge Vijay Vaskale said case has been registered against 7 family members of the two girls. Police took cognizance after #video went viral pic.twitter.com/j25tNvImOh
— Free Press Journal (@fpjindia) July 4, 2021