முதன்முறையாக பிரபல இசையமைப்பாளருடன் கூட்டணி அமைக்கும் ஷங்கர்!

Date:

ஷங்கர் – ராம்சரண் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ள இயக்குனர் ஷங்கர், தற்போது அதற்கான முதற்கட்ட பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்திற்கு தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தமன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டணி உறுதியானால் ஷங்கர் படத்துக்கு தமன் இசையமைக்கும் முதல் படமாக இது அமையும். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தில் இசையமைப்பாளர் தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்கு பின் அவர் நடிப்பை விட்டுவிட்டு முழு நேர இசையமைப்பாளராக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்